மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் விஜய்... இந்த முறையாவது ஒர்க்கவுட்டாகுமா ?

vijay

பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். பெரிய அளவில் மார்க்கெட்டை வைத்துள்ள அவர், தமிழில் மட்டுமே நடித்து வந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'வாரிசு' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். இதற்கு முன்னர் வரை விஜய்யின் படங்கள் டப் செய்யப்பட்டு மட்டுமே தெலுங்கு வெளியாகி வந்தது. 

vijay

'வாரிசு' படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்தார். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு ஆகிய இருவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள். கடந்த பொங்கலுக்கு வெளியாக இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் மீண்டும் தெலுங்கு படம் ஒன்றில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.  ‌ 

vijay

இந்த படத்தை பாலகிருஷ்ணா நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளார்‌. சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து இயக்குனர் கோபிசந்த் மலினேனி கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும், ஆனால் இறுதி முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விஜய்க்கு ஒரு தொகையை அட்வான்ஸாக கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Share this story