விஜய், கீர்த்தி சுரேஷ் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா.. வைரலாகும் வீடியோ..

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.
தமிழ் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல திரைப்பிரபலங்கள் அவர்களுடன் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் from #TheRouteFamily✨
— TheRoute (@TheRoute) January 14, 2025
▶️ https://t.co/dBlFFrNYrj#Thalapathy @actorvijay sir @KeerthyOfficial #AntonyThattil @kalyanipriyan @am_kathir @isanjkayy @_mamithabaiju @Sudhans2017 made our day as sweet as Sakkarai Pongal 🫶🏻#HappyPongal pic.twitter.com/xeGbVxvgW3
சமீபத்தில் திருமணமான பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது தல பொங்கலை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில் ஜெகதீஷ் பழனிசாமி அவர்களின் தயாரிப்பு நிறுவனமான தி ரூட் நிறுவனம் பொங்கலை கொண்டாடினார்கள்.இந்த கொண்டாடத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில், கல்யாணி பிரியன், கதிர், மமிதா பைஜூ, சஞ்சனா என பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்த வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.