நார்வேயில் ஷாப்பிங் சென்ற ‘விஜய், திரிஷா’ –வைரலாகும் புகைப்படம்.

photo

கில்லி படத்தில் தொடங்கிய திரிஷா, விஜய் காம்போ தொடர்ந்து ஆதி, திருப்பாச்சி, குருவி என தற்போது லியோவில் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் நார்வே நாட்டில் ஒன்றாக சுற்றிதிரியும் புகைப்படம் இன்று வைரலாகி வருகிறது.

photo

விஜய் யாருடன் ஜோடிபோட்டாலும் விஜய், திரிஷா காம்போ என்பது  எப்போதும்  கொஞ்சம் ஸ்பெஷல்தான். திரையில் பார்க்க அவ்வளவு பொருத்தமான ஜோடியாக அவர்கள் இருப்பார்கள். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இவர்கள் லியோ படத்தில் சேர்ந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் சில வாரத்திற்கு முன்னர் படத்தின் பேச் அப் வேலைக்காக திரிஷா காஷ்மீர் சென்றதாக கூறப்பட்டது. அதேப்போல நடிகர் விஜய்யும் தனது மகனை பார்க்க லண்டன் சென்றதாக கூறப்பட்டது.

photo

தொடர்ந்து திரிஷா பணிகளை முடித்து விட்டு நார்வே சென்றுவிட்டாராம். தற்போது நடிகை திரிஷா மற்றும் விஜய் ஒன்றாக நர்வே நாட்டில் ஷாப்பிங் சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இது சிசிடிவியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் கூட அதைவைத்து தங்களது யூகங்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Share this story