கொல மாஸ்.. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிறது ‘தளபதி 68’.. ஏஜிஎஸ் நிறுவனம் அறிவிப்பு !

thalapathy 68

 விஜய்யின் 68வது படத்தின் அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் அதிரடியாக வெளியிட்டுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ அவர் நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை முடித்து அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யின் 68வது படமாக உருவாகும் இந்த படத்தை அட்லி, தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி உள்ளிட்டோர் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

thalapathy 68

இந்நிலையில் விஜய்யின் 68வது படத்தின் அறிவிப்பு அதிரடியாக வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் விஜய்யின் ‘பிகில்’ படத்தையும் தயாரித்துள்ளது. ஏஜிஎஸ்ஸின் 25வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

thalapathy 68

இந்த படத்தை  சென்னை - 28, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யின் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். சர்வதேச அளவில் உருவாகும் இந்த படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.  

thalapathy 68

நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 


 

Share this story