‘நான் ரெடி’ பாடல் சர்ச்சை- பதிலடி கொடுத்த தளபதி!

photo

‘லியோ’ படம் வெளியாகி நல்ல ரீச் கொடுத்த நிலையில் படத்தின் வெற்றி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல தளபதி விஜய் குட்டி ஸ்டோரி கூறி அசத்தினார், தொடர்ந்து பல விஷயங்கள் பேசிய அவர் ‘நான் ரெடி பாடல் ‘ சர்ச்சையானது குறித்து பதிலடியும் கொடுத்துள்ளார்.

photo

லியோ படத்தில் இடம் பெற்ற ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. எந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றதோ அதே அளவுக்கு சர்ச்சையையும் கிளப்பியது. அதற்கு காரணம் பாடலில் இடம் பெற்ற ‘விரல் இடுக்குல தீ பந்தம்’ என்ற வரி. அதற்கு வெற்றி விழாவில் பதிலடி கொடுத்துள்ளார் தளபதி விஜய்  “ விரல் இடுக்குல தீ பந்தம் அப்படினா சிகரெட்டாக தான் இருக்க வேண்டுமா? ஏன் அது பேனாவா இருக்கலாம்ல, ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க’ ஏன் அது கூல்லாக இருக்கலாம்ல, சினிமாவ சினிமாவா பாருங்க, பள்ளி, கல்லூரி பக்கத்துல கூடதான் டாஸ்மார்க் இருக்கு அதுக்காக டெலியி ரெண்டு ரவுண்ட் அடிச்சிட்டா பள்ளிக்கு போறாங்க” என கூறினார்.

Share this story