விஜய் ஆண்டனி நடிக்கும் "பிச்சைக்காரன் 3"-யார் இயக்குனர் தெரியுமா ?

vijat antony

விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா நடித்துள்ள ‘அப்பாகுட்டி’ என்ற படம், வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது. ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி தயாரித்து இசை அமைத்து எடிட்டிங் செய்துள்ளார். ஏகாதசி, அருண் பாரதி பாடல்கள் எழுதியுள்ளனர். மு.மாறன் எழுதி இயக்கியுள்ளார்.

படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், ‘ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான அன்பு, பாசத்தை மையப்படுத்தி, ஆக்‌ஷனுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. தந்தையின் தியாகங்களை பற்றி பேசும் இப்படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை அழவைக்கும். பிரீத்தி அஸ்ரானி, எந்த கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கிறார். பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது.

தவிர, ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் நான் நடிக்கும் ‘பிச்சைக்காரன் 3’ என்ற படத்தை பற்றி அறிவிப்பதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார். பிரீத்தி அஸ்ரானி கூறும்போது, ‘அப்பாவின் அன்பையும். தியாகத்தையும் உணரக்கூடிய தருணங்கள் படத்தில் இருக்கின்றன.

Share this story