விஜய் ஆண்டனி நடிக்கும் புது படம் ‘அப்பா குட்டி’ -யார் ஜோடி தெரியுமா ?
1780021858000
விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்துக்கு ‘அப்பா குட்டி’ என தலைப்பிட்டுள்ளனர். இதில் அவருக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, சித்ரா லட்சுமணன், ஜா ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். மு.மாறன் எழுதி இயக்கியுள்ளார். இவர் இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே, பிளாக்மெயில் படங்களை இயக்கியவர். படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும். தந்தை, மகளுக்கு இடையிலான பாசக்கதையுடன் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எடிட்டிங் செய்து விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - ராஜீவ் ராஜேந்திரன்..
ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும். தந்தை, மகளுக்கு இடையிலான பாசக்கதையுடன் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எடிட்டிங் செய்து விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - ராஜீவ் ராஜேந்திரன்..