பெங்களூரில் கோலாகல இசைக்கச்சேரி நடத்திய விஜய் ஆண்டனி

பெங்களூரில் கோலாகல இசைக்கச்சேரி நடத்திய விஜய் ஆண்டனி

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி  பிச்சைக்காரன், சலீம், சைத்தான், கொலை, ரத்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் விஜய் ஆண்டனி நடத்திய இசை நிகழ்ச்சி பெரிய வரவேற்பு பெற்றது. இதையடுத்து, அவரது மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை உலுக்கியது. துயர சம்பவத்திற்கு பிறகு நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார். 


இந்நிலையில், மீண்டும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த விஜய் ஆண்டனி திட்டமிட்டிருந்தார். அதன்படி  பெங்களூரில் விஜய் ஆண்டனியின் இசைக்கச்சேரி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. 
 

Share this story