மாஸ் காட்டும் விஜய் ஆண்டனி.. பட்டையை கிளப்பும் ‘பிச்சைக்காரன்’ வசூல் !

Pichaikaaran2

 விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘பிச்சைக்காரன்‘ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘பிச்சைக்காரன் 2’ உருவாகி வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Pichaikaaran2

தமிழ் மற்றும் தெலுங்கில் என இருமொழிகளில் உருவான இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டு மொழிகளிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அண்ணன் - தங்கை சென்டிமென்டில் இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரனாக இருக்கும் ஒருவன் எப்படி பல மில்லியன் கோடி பணக்காரனாகிறான் என்பதுதான் கதை. 

இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இதுவரை எந்தவொரு விஜய் ஆண்டனியின் படத்திற்கும் இல்லாத அளவிற்கு இப்படம் முதல் நாளில் 3.25 கோடி வசூலித்துள்ளது. அதேபோன்று தெலுங்கிலும் வெளியான இப்படம் 4 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story