''பணம் உலகை காலி பண்ணிடும்'' - 'பிச்சைக்காரன் 2' முக்கிய அப்டேட் !

pichaikaran 2

 விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

விஜய் ஆண்டனியின் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சசி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் தனது அம்மாவிற்காக பிச்சைக்காரன் அவதாரம் எடுப்பதே இந்த படத்தின் கதை. உண்மையில் நடந்த இந்த சம்பவத்தை வைத்து உருவான இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 

https://twitter.com/TamilCineXpress/status/1623646761431764993?t=fRcVi_65br_7g6PXPP0NfQ&s=09

இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இதுதவிர இந்த படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் 4 நிமிட ஸ்னீக் பீக் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற 4 நிமிட ஸ்னீக் பீக் வெளியிடப்படுவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாகும். 


 

Share this story