தமிழ் புத்தாண்டில் வெளியாகும் ‘பிச்சைக்காரன் 2’.. விஜய் ஆண்டனி பட முக்கிய அறிவிப்பு !

பிரபல இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, ஹீரோவாக அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். அவர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் தனது அம்மாவிற்காக பிச்சைக்காரன் அவதாரம் எடுப்பதே கதை.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ள இந்த படம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிரட்டலாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் 4 நிமிட கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.