குத்து பாடலாக உருவாகியுள்ள டுமிக்கி ஃசால்.. ‘பிச்சைக்காரன் 2’ வீடியோ பாடல் அறிவிப்பு !

Pichaikkaran2

 விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. விஜய் ஆண்டனியே இயக்கியுள்ள இந்த படம் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படத்தை அவரது மனைவியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரித்துள்ளது. 

Pichaikkaran2

இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டுமிக்கி ஃசால்’ என்ற வீடியோ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குத்து பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Share this story