குத்து பாடலாக உருவாகியுள்ள டுமிக்கி ஃசால்... 'பிச்சைக்காரன் 2' வீடியோ பாடல் வெளியீடு !

pichaikaran 2

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் இருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.  

‘பிச்சைக்காரன்’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

pichaikaran 2

விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படத்தை அவரது மனைவியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

pichaikaran 2

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டுமிக்கி ஃசால்’ என்ற வீடியோ வெளியாகியுள்ளது. குத்து பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  பாடலாசிரியர் அருண் பாரதி எழுதிய இந்த பாடலை கரிஷ்மா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story