தள்ளிப்போகிறதா ‘பிச்சைக்காரன் 2’.. விஜய் ஆண்டனி எடுத்த அதிரடி முடிவு !

pichaikkaran-2

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஆன்ட்டி பிகிலி கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இதையடுத்து பிகிலி யார் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

pichaikkaran-2

இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே தேதியில் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ உள்ளிட்ட சில படங்கள் வெளியாகவுள்ளது. இதனால் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு மவுசு குறையும் என்று விஜய் ஆண்டனி நினைக்கிறாராம். அதனால் மே மாதத்தில் தனி இப்படத்தை வெளியிட அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story