‘பிகிலி’ யார் ?.. வீடியோ வெளியீட்டு அறிவித்த நடிகர் விஜய் ஆண்டனி !

Pichaikkaran2

 ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் பிகிலி யார் என்பதை நடிகர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். 

‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Pichaikkaran2

விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் 4 நிமிட கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ஆன்ட்டி ‘பிகிலி’ நான் தான் என்று விஜய் ஆண்டனி அறிவித்துவிட்டார். இந்நிலையில் பிகிலி யார் என்பதை தற்போது அறிவித்துள்ளார். அதன்படி ‘ஏழைங்கள ஏமாத்துறவனுக்கு 😡 நான் வெச்ச பேருதான் ‘பிகிலி’ என்று கூறியுள்ளார். அதோடு பிகிலி குறித்து அறிவிக்கும் வீடியோ பாடல் ஒன்றையும் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story