‘விஜய் ஆண்டனி’யின் ‘ஹிட்லர்’ பட மோஷன் போஸ்டர் வெளியீடு.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் தனா எழுதி இயக்கிவரும் படம் ‘ஹிட்லர்’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். கதாநாயகியாக ரியா சுமன் இணைந்துள்ளார். பொலிடிகல் திரில்லராக தயாராகவுள்ள இந்த படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைக்கின்றனர். நவீன் குமார் செய்கிறார்.
இந்த நிலையில் படத்தின் மோஷம் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உருவாக உள்ள இநத படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தி வெகுவாக ஈர்த்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகொண்ட விஜய் ஆண்டனியின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.