“மீரா தங்கம்…..ரொம்ப வலிக்குது, என்னால் வெளியே வர முடியவில்லை”- விஜய் ஆண்டனியின் மனைவி உருக்கம்.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்ஆண்டனியின் மகள் மீரா கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் குடும்பத்தில் உள்ளவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா இழந்த மகளின் பிரிவை ஏற்க முடியாமல் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளர்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ மீரா தங்கம், உனது பியானோ உனது தொடுதலுக்காக காத்துள்ளது. எங்களால் இன்னும் நம்ப முடியவில்லை. நீ சீக்கிரம் சென்றுவிட்டாய் பேபி….இந்த உலகம் உனக்கானது இல்லை. அம்மா இங்கே இருக்கிறேன். என்னை வெறு மை சூழ்ந்துவிட்டது. நான் உன்னை சந்திக்கும் வரை நன்றாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு, லாரா மிஸ் செய்கிறாள். ரொம்ப வலிக்குது. அனைவரின் அன்பிற்கும் பிராத்தனைகளுக்கும் நன்றி. உனது இழப்பை எங்களால் நம்ப முடியவில்லை. அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. காலம்தான் குணபடுத்த வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.