மாறுப்பட்டு உருவாகியிருக்கும் ‘கொலை’... மேக்கிங் வீடியோ வெளியீடு !

kolai

 விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

 ‘விடியும் முன்’ படத்தின் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் மாறுப்பட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’. இந்த படத்தில் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

kolai

இப்படத்திற்கு க்ரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.  இந்த படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kolai

க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாடல் அழகின் மர்மமான கொலையை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

kolai

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங், ஒளிப்பதிவு, இசை, சவுண்டு ஆகியவை குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்த வீடியோ படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story