டிடெக்டிவ்வாக களமிறங்கிய விஜய் ஆண்டனி.. மிரட்டலாக வெளியாகும் ‘கொலை’ திரைப்படம் !

kolai

 விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ திரைப்படமும் இணையவுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

kolai

இந்த படத்தை ‘விடியும் முன்’ படத்தின் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு க்ரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். 

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் ‘கொலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஜூலை மாதம் 21-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

 

Share this story