மிரட்டலாக உருவாகியுள்ள விஜய் ஆண்டனியின் ‘கொலை’... ஸ்னீக் பீக் வெளியீடு

kolai

 விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கொலை’. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

kolai

இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘விடியும் முன்’  படத்தை போன்று மாறுப்பட்ட ஜானரில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜிகுமார்.  இந்த படத்தில் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு க்ரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். 

kolai

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இப்படத்தின் மேக்கிங் காட்சி ஒன்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சி வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story