விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்...!

vijay

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மார்கன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிகராக நடித்த படங்களில் பிச்சைக்காரன் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் வெளியானது. தற்போது மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மார்கன் என்ற படத்தில் நடிக்கிறார். 'சூது கவ்வும்', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் லியோ ஜான் பால். இவர் இப்போது இயக்குனராக களமிறங்கி ‛மார்கன்' படத்தை இயக்கியுள்ளார்.


சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, தீப்ஷிகா, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் இப்படம் மூலம் வில்லனாக களமிறங்குகிறார். குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக இப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் வரும் ஜூன் 27ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையும் அமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

Share this story