விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' படத்தின் ட்ரைலர் அப்டேட்...!

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மார்கன்' படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடைசியாக 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் வெளியானது. தற்போது மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மார்கன் என்ற படத்தில் நடிக்கிறார். 'சூது கவ்வும்', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் லியோ ஜான் பால். இவர் இப்போது இயக்குனராக களமிறங்கி ‛மார்கன்' படத்தை இயக்கியுள்ளார்.
#MAARGAN Trailer from tomorrow ❌@leojohnpaultw @AJDhishan990 @mrsvijayantony @vijayantonyfilm pic.twitter.com/igaNgiKF7q
— vijayantony (@vijayantony) May 25, 2025
சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, தீப்ஷிகா, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் இப்படம் மூலம் வில்லனாக களமிறங்குகிறார். இப்படம் வரும் ஜூன் 27ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.