விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் ‘ரோமியோ’... மலேசிய ஷெட்டியூலை நிறைவு செய்த விஜய் ஆண்டனி !

romeo

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘ரோமியோ’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ரோமியோ’. தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘லவ் குரு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

romeo

‘கணம்’ படத்தில் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்கிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விநாயக் வைத்தியநாதன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். இவர்களுடன்  விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

விஜய் ஆண்டனி மற்றும் குட் டெவில் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. 

 

Share this story