‘நிறைய காயம் பட்டு மரத்துவிட்டது’- மகளின் இழப்பு குறித்து முதல் முறையாக மௌனம் கலைந்த ‘விஜய் ஆண்டனி’.

photo

நடிகர் விஜய் ஆண்டனி  ‘ரத்தம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு, தனது மகள் மீராவின் இழப்பு குறித்து பேசியுள்ளார்.

photo

நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. தனித்துவமான ராப் கலந்த இவரது பாடல்களுக்கு தனி ரசிகர் பாட்டாளமே உள்ளது. ஏராளமான படங்களில் நடித்துள்ள இவரை புகழின் உச்சிக்கு  கொண்டு சென்றது ‘பிச்சைக்காரன்’ படம். தொடர்ந்து கைவசம் எக்கசக்கமான படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி வீட்டில் இரண்டு வாரத்திற்கு முன்பு ஈடு செய்யமுடியாத சோகம் நடந்தது. விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  12ஆம் வகுப்பு படித்த அவர் மன அழுத்த காரணமாக இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியானது.

photo

தொடர்ந்து விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினர், அந்த சோகத்திலிருந்து மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் ‘ரத்தம்’ படத்தின் ஆடியோ நிகழ்ச்சிக்கு தனது இளைய மகளுடன் வந்தார் விஜய் ஆண்டனி. அவரிடம் மகளின் இறப்பு குறித்து கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்” என் வாழ்கையில் சிறுவயதிலிருந்தே பல கஷ்டங்கள், காயங்களை பார்த்துவிட்டேன், நிறைய காயம் பட்டு பட்டு மரத்துவிட்டது. வாழ்கையில் எல்லா திசைகளையும் பார்த்து விட்டேன். வாழ்வில் எதையும் மறக்க வேண்டிய அவசியம் இல்லை. வாழ்கையே ஞாபகம்தான். மறக்க நினைக்க மாட்டேன், வலி ஏற்பட்டாலும் அதோடு வாழ நினைப்பேன்” என கூறியுள்ளார்.

 

Share this story