முன்னணி படத்தொகுப்பாளர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி

vijay antony
விஜய் ஆண்டனி சமீபத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் ஹிட்லர் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படமுமே மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது இதைத் தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனரான லியோ ஜான் பால் இயக்கத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர். இப்படத்தை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இவருடன் சமுத்திரகனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனரான லியோ ஜான் பால் இதற்கு முன் பிரபல திரைப்படங்களான அட்டகத்தி, பீசா, சூது கவ்வும் போன்ற திரைப்படங்களுக்கு படதொகுப்பாளராக இருந்தவர் ஆவார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்குனராக ராஜா பணியாற்றியுள்ளார். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story