சந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் விஜய் ஆண்டனி பட நடிகை...!
Wed Mar 26 2025 12:26:40 PM

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தில் தெலுங்கு நடிகை பரியா அப்துல்லா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிபில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை பரியா அப்துல்லா இணைந்து நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் தெலுங்கில் ஜதி ரத்னலு, ராவணசூரா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் எனும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.