'ஜென்டில்வுமன்' இயக்குனருடன் இணையும் நடிகர் விஜய் ஆண்டனி...!

நடிகர் விஜய் ஆண்டனி, ’ஜென்டில்வுமன்' பட இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளர், நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹிட்லர், ரோமியோ, மழைபிடிக்காத மனிதன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. இவர் தற்போது 'சக்தித் திருமகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து 'ககன மார்கன், வள்ளி மயில்' என்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி அடுத்ததாக 'ஜென்டில்வுமன்' பட இயக்குனர் ஜோஸ்வா சேதுராமனுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.