விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை....திரையுலகினர் இரங்கல்

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மீராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை

விஜய் ஆண்டனியின் மகள் மீரா மறைவுக்கு இயக்குநர்கள் வெங்கட் பிரபு, நடிகர் சரத்குமார் மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர். நடிகை குஷ்பு மற்றும் விஜய்யின் அம்மா ஷோபனா ஆகியோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். திரையுலகினர் பலர் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this story