விஜய் ஆண்டனியின் `ஹிட்லர்' பட ட்ரைலர் வெளியீடு
1726743312000
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஹிட்லர் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
#Hitler Trailer OUT NOW
— Karthik Ravivarma (@Karthikravivarm) September 18, 2024
▶️ https://t.co/xUISs8W0Si
Starring 🌟 #Vijayantony | #GVM | #Riyasuman
𝐌𝐨𝐯𝐢𝐞 𝐇𝐢𝐭𝐭𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞𝐚𝐭𝐫𝐞𝐬 𝐨𝐧 𝐒𝐞𝐩 𝟐𝟕𝐭𝐡 🎬 pic.twitter.com/TYIHJiLLdI