விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ட்ரைலர் ரிலீஸ்...!

vijay antony

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மார்கன்’ ட்ரைலர் வெளியாகி உள்ளது. 

முன்னணி எடிட்டராக இருந்த லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மார்கன்’. விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படம் மர்மம் கலந்த குற்றவியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் வில்லனாக அறிமுகமாகிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக யுவா, கலை இயக்குநராக ராஜா, இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரை பார்க்கும்போது ‘ராட்சஷன்’ பாணியிலான விறுவிறுப்பான த்ரில்லர் படத்தை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது. இப்படம் வரும் ஜூன் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story