விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' பட டீசர் ரிலீஸ்..!

விஜய் ஆண்டனி நடித்துள்ள சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. .
இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி தற்போது தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் 'காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன்' உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விஜய் ஆண்டனியின் அடுத்த படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.
💸🏛️ TESAER OUT NOW 💸🏛️
— vijayantony (@vijayantony) March 12, 2025
🔺#ShakthiThirumagan - https://t.co/LXOPM2BUPM
🔺#Bhadrakaali - https://t.co/WkjjwmU3NM#VA25⛓️@ArunPrabu_ @TruptiRavi58094 #SunilKirpalani @vijayantonyfilm pic.twitter.com/rF5sVXRPfP
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் 25வது படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு 'சக்தித் திருமகன்' எனப் பெயரிடப்பட்ட நிலையில், படத்தின் டீசர் ரிலீஸ் வெளியாகி உள்ளது.