லியோ தளத்தில் விஜய் குழந்தை மாதிரி - மடோனா செபாஸ்டியன்

லியோ தளத்தில் விஜய் குழந்தை மாதிரி - மடோனா செபாஸ்டியன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

லியோ தளத்தில் விஜய் குழந்தை மாதிரி - மடோனா செபாஸ்டியன்

இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இது மட்டுமன்றி இங்கிலாந்திலும் முதல் நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ள லியோ திரைப்படம். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  ரசிகர்கள் மட்டுமன்றி லியோ படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

லியோ தளத்தில் விஜய் குழந்தை மாதிரி - மடோனா செபாஸ்டியன்

படத்தில் பிரபல மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் விஜய் குறித்து பேசியபோது, லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய் குழந்தை மாதிரி அமைதியாக இருப்பார் என்றும், அர்ஜூனை கண்டால் மிகவும் பயமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

Share this story