புதிய சொகுசு காரை வாங்கியுள்ளாரா தளபதி விஜய்.. என்ன கார் தெரியுமா!

Vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.இப்படத்தை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படம் தான் விஜய்யின் கடைசி படம் ஆகும். இப்படத்தை முடித்தபின் முழுமையாக அரசியலில் விஜய் களமிறங்கவுள்ளார்.ஹெச். வினோத் இயக்கவிருக்கும் இப்படத்தில் சமந்தா, மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

vijay
இந்நிலையில், நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் அவருடைய Volvo காரையும் விற்பனை செய்துவிட்டாராம். இந்த நிலையில் தற்போது புதிதாக Lexus எனும் சொகுசு கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 65 லட்சம் முதல் துவங்கி ரூ. 2.80 கோடிக்கும் மேல் Lexus கார்களின் விலை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story