அந்த மனசுதான் சார் கடவுள்... குஷி வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா அதிரடி அறிவிப்பு!
குஷி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, மக்களுக்காக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டாவும், அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கோலாகலமாக வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது ஊதியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
#VijayDeverakonda will be giving ₹1 crore to 100 needy families, ₹1 lakh each in the next 10 days.
— Filmy Focus (@FilmyFocus) September 4, 2023
Spreading KUSHI to the Devara family...! pic.twitter.com/ZaLm2BvyyZ
10 நாட்களில் 100 குடும்பங்களை தேர்வு செய்து, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் குஷி நிகழ்ச்சிக்கு முன்பாக இந்த தொகை வழங்கப்படும் என்றும், அப்போது தான் குஷி படத்தின் வெற்றி முழுமை அடையும் என்றும் விஜய் தேவரகொண்டா கூறினார்.
Watch the film in theatres & Fall in Love with #Kushi ❤️
— Mythri Movie Makers (@MythriOfficial) September 5, 2023
Book your tickets now for the BLOCKBUSTER FAMILY ENTERTAINER!
- https://t.co/16jRp6UqHu#BlockbusterKushi 🩷@TheDeverakonda @Samanthaprabhu2 @ShivaNirvana @HeshamAWMusic @saregamasouth pic.twitter.com/ZSXRMr22V3