சூர்யாவுடன் இணையும் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா!

surya

சூர்யா 46 படத்தில் சூர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 45 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா தனது 46வது திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இதனை, துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி வெங்கி அட்லூறி இயக்குகிறார். அடுத்த மாதம் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  surya

இந்த நிலையில் சூர்யாவின் 46 வது திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க செய்துள்ள நிலையில் படத்தில் சூர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ரெட்ரோ முன்னோட்ட நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

Share this story