இசையமைப்பாளர் அனிருத்-க்கு காதல் கடிதம் எழுதிய நடிகர் விஜய் தேவர்கொண்டா...

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள `கிங்டம்' படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், அவருக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான HridayamLopala ப்ரோமோ வீடியோவை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்-க்கு நடிகர் விஜய் தேவரகொண்டா காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
Hey @anirudhofficial ☺️#HridayamLopala from #Kingdom - Today 4.06 PM onwards ❤️@gowtam19 @vamsi84 pic.twitter.com/NoIt6IiXea
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 2, 2025
அதில், ஒரு காதல் பாடலை வெளியிடும்போது, அனிக்கு என்னுடைய சிறிய காதல் கடிதம், விஐபி மற்றும் 3 படங்களிலிருந்து நான் அனிருத்தின் மிகப்பெரிய ரசிகன். இந்த மேதை யார் என்று யோசித்தேன், நான் எப்போதாவது ஒரு நடிகரானால், நான் திரையில் வரும்போது அவரது இசை இசைக்கும் என்று ஆசைப்பட்டேன்.10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, எனது 13வது படம் 28 நாட்களில் வெளியிடத் தயாராகும் நிலையில், இது அனிருத் விஜய் தேவரகொண்டாவின் முதல் பாடல், நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதன் மற்றும் மகிழ்ச்சியான நடிகர். இன்று முதல் எங்கள் உலகங்களையும் எங்கள் உணர்ச்சிகளையும் உங்களுக்குத் திறக்கிறோம் இது உங்கள் உலகங்களுக்கு மகிழ்ச்சியையும் நினைவுகளையும் கொண்டு வரும் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.