விஜய் தேவரகொண்டாவின் ''சஹிபா'' வீடியோ பாடல் டீசர் வெளியானது

vijay devrerkonda

ஜஸ்லீன் ராயல் இசையமைப்பில் உருவாகியுள்ள ''சஹிபா'' பாடலில் விஜய் தேவகொண்டா நடித்துள்ளார்.பிரபலமான பஞ்சாபி பாடகர் ஜஸ்லீன் ராயல். இவரது இசையில் ''ஹீரியே'' என்ற மியூசிக் வீடியோ கடந்த ஆண்டு வெளியானது. அதில் துல்கர் சல்மான் மற்றும் ஜஸ்லீன் ராயல் நடித்திருந்தனர். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து, ஜஸ்லீன் ராயல் இசையமைப்பில் ''சஹிபா'' என்ற மற்றொரு மியூசிக் வீடியோ உருவாகியுள்ளது. 

விஜய் தேவரகொண்டா மற்றும் ராதிகா மதன் நடித்துள்ள இந்த வீடியோவின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் டீசருக்கு வரவேற்பை கொடுத்து வருகின்றனர். மேலும், முழு பாடல் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்புடன் காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது மியூசிக் வீடியோ பாடல் வருகிற 15-ந் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ''ஹீரியே'' பாடல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், இந்த பாடலும் ஹிட் அடிக்குமா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story