விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
Thu Jan 25 2024 4:36:20 PM
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் தனக்கென ரசிகர்களாக ஒரு பெரும் பட்டாளத்தையே கொண்டுள்ளார். அதற்கு காரணம் அவர் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்து மாவட்டத்திலும் உள்ள ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலமாக பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் வெளியான +2 பொது தேர்வில் அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் மாணவர்களை அழைத்து பரிசுகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவப்படுத்தினார்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.