கோவிலில் பாத்திரம் கழுவும் விஜய் பட நடிகர் – வைரலாகும் புகைப்படங்கள்.

photo

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படங்கள் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. அதேபோல எவர் கிரீன் லிஸ்டின் நீளமும் சற்று அதிகம்தான்.  இந்த வரிசையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘துப்பாக்கி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த படத்தில் கதாநாயகனான விஜய் எந்த அளவுக்கு மாஸ்ஸாக ஒரு லுக்கில் இருந்தாரோ அதேப்போல அந்த படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வாலும் செம மாஸ்ஸான லுக்கில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். தொடர்ந்து, பில்லா2, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் கலக்கி வருகிறார்.

photo

இந்த நிலையில் அவர் தற்போது பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டு.  அங்கு பாத்திரங்களை மணலால் கழுவி சுத்தப்படுத்தியுள்ளார். வித்யூத்தின் இந்த சேவையை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பாத்திரம் கழுவுவதை பலரும் நேர்த்தி கடனாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

photo

Share this story