இந்தியா அளவில் 2ஆம் இடம் பிடித்த விஜய்...!

Vijay

இந்தாண்டு இந்தியாவில் அதிகளவில் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலை ‘ஃபார்ச்சூன் இந்தியா’ ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் விஜய்யைத் தவிர மற்ற தமிழ் பிரபலங்கள் யாரும் இடம் பெறவில்லை. அவர் ரூ. 80 கோடி செலுத்தி இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ரூ.92 கோடி வரி செலுத்தி ஷாருக்கான் இருக்கிறார். 

சல்மான் கான் ரூ.75 கோடி வரி செலுத்தி மூன்றாவது  இடத்தை பெற்றுள்ளார். அமிதாப் பச்சன் ரூ. 71 கோடி வரி செலுத்தி நான்காவது இடத்தை பெற்றுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ரூ. 66 கோடி வரி செலுத்தி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளார். அஜய் தேவ்கன் ரூ.42 கோடி வரி செலுத்தி ஆறாவது இடத்தை பெற்றுள்ளார். கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ரூ.38 கோடி வசூலித்து ஏழாவது இடத்தை பெற்றுள்ளார்.   

 

null


அதைத்தொடர்ந்து ரன்பீர் கபூர் ரூ.36 கோடி வரி செலுத்தி எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் கிருத்திக் ரோஷன் ஆகியோர் ரூ.28 கோடி வசூலித்து ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளனர். கங்குலி ரூ.23 கோடி வரி செலுத்தி பத்தாவது இடத்தை பெற்றுள்ளார். இதையடுத்து கரீனா கபூர் ரூ.20 கோடியும், ஷாஹித் கபூர், மோகன் லால், அல்லு அர்ஜூன் ஆகியோர் ரூ.14 கோடியும், ஹர்திக் பாண்டியா ரூ. 13 கோடியும், கியாரா அத்வானி ரூ.12 கோடியும், கத்ரீனா கைஃப் மற்றும் பங்கஜ் ரூ.11 கோடியும், அமீர்கான் மற்றும் ரிஷப் பண்ட் ரூ.10 கோடியும் செலுத்தி அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.

விஜய் நடிப்பில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இன்று (05.09.2024) வெளியாகியுள்ளது. இதனிடையே அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story