விமானத்திலிருந்து ஸ்டைலாக இறங்கிய விஜய்... வீடியோ வைரல்...
1697608368531

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வர வர, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Thalapathy Latest Video 💥😍
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 18, 2023
pic.twitter.com/jwz0eWAuS9
இந்நிலையில், நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. விமானத்திலிருந்து இறங்கி காரில் விஜய் ஏறிச் செல்லும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.