தமிழகத்தில் ரிலீஸ் ஆனது விஜய்யின் 'தி கோட்'
1725519466148
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 'தி கோட்' படத்துக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் தமிழக தியேட்டர்களில் சிறப்பு காட்சியுடன் அதிக பட்சம் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. வெளிமாநிலங்களில் இந்த படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் தமிழகத்தில் கோட் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.