GOAT படத்தின் 3ஆம் சிங்கிள் "Spark" ப்ரோமோ : ஸ்டைலான லுக்கில் தளபதி விஜய்..!

Vijay

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் 3-வது சிங்கிள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட  நிலையில் அதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இப்படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாவது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ விஜய்யின் பிறந்த நாளைமுன்னிட்டு வெளியானது. மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ மூலம் மறுஆக்கம் செய்யப்பட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் 3-வது சிங்கிள் ஸ்பார்க் என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது.. 


 

Share this story