இளைய தலைமுறையின் நம்பிக்கையாக இருக்கிறார் விஜய் - நடிகர் சத்யராஜ் கருத்து !

sathyaraj

இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் இருப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் சத்யராஜ். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற தனியார் அழகு நிலைய திறப்புவிழாவில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். 

sathyaraj

அப்போது பேசிய அவரிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் செய்தது நல்ல விஷயம். அது குறித்து அவரே வெளிப்படையாக சொல்லாதபோது நான் பேசுவது நன்றாக இருக்காது. அம்பேத்கர், பெரியார், காமராஜரை ஆகிய தலைவர்களை படிக்கவேண்டும் என்று விஜய் சொன்னது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக நடிகர் விஜய் இருக்கிறார். 

sathyaraj

‘லியோ’ போஸ்டரில் புகைப்பிடிப்பது போன்று விஜய் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்காக சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும். நான் கூட ஒரு படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்திருக்கிறேன் என்று கூறினார். 

 

 

 

Share this story