டபுள் ஆக்சனில் விஜய்... லியோ பட ட்ரைலர் வெளியானது...

டபுள் ஆக்சனில் விஜய்... லியோ பட ட்ரைலர் வெளியானது...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வெளியானது

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

இதற்கிடையே, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. வெளியான 5 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. முன்னோட்டத்தை கண்ட ரசிகர்கள், டபுள் ஆக்‌ஷனில் விஜய் நடித்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

Share this story