காஷ்மீரில் கடும் குளிரில் ‘லியோ’ படப்பிடிப்பு... வெளியானது ஷூட்டிங் புகைப்படங்கள் !

leo

 விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. மிரட்டலான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக வெறித்தனமான டைட்டில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

leo

 இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

leo

60 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு -5° குளிரில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் என 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ் இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த புகைப்படத்தில் திரிஷா மட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Share this story