விஜய்யின் ‘லியோ’ படப்பிடிப்பு நிறுத்தமா ?... அதிர்ச்சியில் ரசிகர்கள் !

leo

விஜய்யின் ‘லியோ‘ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய்யின் மாஸான நடிப்பில் லோகேஷ் கனகராஜின் மிரட்டலான இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘லியோ’. இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.  

leo

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன்  சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

leo

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தயார் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச் சடங்களை கவனித்து தற்போது அவர் சென்னை வந்துள்ளார். அதனால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் இரு நாட்களில் மீண்டும் காஷ்மீர் சென்று படத்தின் பணிகளை கவனிப்பார் என்று தகவல் கசிந்துள்ளது. 

 

Share this story