திட்டமிட்டபடி நடைபெறும் ‘லியோ’ படப்பிடிப்பு... உற்சாகமாக பணியாற்றும் படக்குழுவினர் !
விஜய்யின் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் மிரட்டலாக உருவாகி வருகிறது ‘லியோ’. இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இதை உறுதிப்படுத்தியது.
60 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 25-ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதையடுத்து சென்னை வரும் படக்குழு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கவிருக்கிறது. சென்னையில் சில நாட்கள் மட்டுமே நடக்கவிருக்கும் இந்த படப்பிடிப்பு வரும் மே உடன் ஒட்டுமொத்தமாக நிறைவுபெற உள்ளது. அதன்பிறகு 4 மாதங்கள் போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் நடைபெறும். பின்னர் திட்டமிட்டபடி படம் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதால் படக்குழுவினரும், தயாரிப்பு தரப்பில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.