கடும் குளிரில் காஷ்மீர் ஷூட்டிங்... ‘லியோ’ படப்பிடிப்பின் நெகிழ்ச்சியான தருணம்.. சர்ப்ரைஸ் வீடியோ வெளியீடு !

leo

 விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் கடும் குளிரில் படமாக்கப்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களின் தொகுப்பு வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. 

விஜய்யின் மாஸ் & கிளாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 50 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். 

leo

தற்போது காஷ்மீர் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து விஜய், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இன்று சென்னை திரும்பினர். இதையடுத்து சென்னை, ஐதராபாத் மற்றும் மூணாறு உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பிற்காக ஏர்போர்ட் செட் ஒன்று தயாராகி வருகிறது. 

leo

இந்நிலையில் காஷ்மீரில் ‘லியோ’ எப்படி படமாக்கப்பட்டது என்பது குறித்து நெகிழ்ச்சி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் - 20 டிகிரி கீழ் உறை பனியில் படக்குழுவினர் பணியாற்றியுள்ளனர். எங்கு பார்த்தாலும் ரத்தத்தை உறைய வைக்கும் பனி இருந்தப்போதிலும் பகல், இரவு பராமல் படக்குழுவினர் பணியாற்றியுள்ளனர். இது குறித்து தங்களது நெகிழ்ச்சியான தருணங்களை படக்குழுவினர் கூறும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 7 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவின் இறுதியில் விஜய் மாஸாக காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Share this story