பிரம்மாண்ட செட்டில் தொடங்கும் ‘லியோ’.. அடுத்தக்கட்ட ஷூட்டிங் குறித்து முக்கிய அப்டேட் !

leo

விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் மிரட்டலான உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்திலிருத்து வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 leo

இ‌ந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. 50 நாட்கள் வரை நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

leo

இந்த படப்பிடிப்பில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமாக செட் ஒன்று தயாராகி உள்ளது. இந்த செட்டில் தற்போது படப்பிடிப்பு நடைபெற உள்ளது.  ‌‌

Share this story